ரஷ்யாவின் சரமாரியான ஏவுகணை தாக்குதல்! திணறும் உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு உக்ரைனில் உள்ள சுமி நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை வீசியதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

ஏவுகணை தாக்குதல்

இந்த தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தாக்குதலில் 84 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி கண்டனம் வெளியிட்டுள்ளார்