இரவோடு இரவாக ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்கிய ரஷ்யா : அதிர்ச்சியில் உக்ரேன்




உக்ரேனின்  பல பகுதிகள் மீது இரவிரவாக ரஷ்யா  பாரியளவில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி உக்ரேனின் பெரிய நகரமான சுமியில் ரஷ்யா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

 இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில்  குழந்தை உட்பட 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த குடியிருப்பில் வசித்திருந்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


அதேபோன்று உக்ரேனின் தெற்கு ஒடேசா பகுதியில்,  மருத்துவமனை மற்றும் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை ட்ரோன்கள் சேதப்படுத்தியதாக பிராந்தியத் தலைவர் ஓலே கிப்பர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


மேலும் இரவு நேரங்களில் ரஷ்யா ஏவிய 80-க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரேன் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.