சர்வதேசத்தை கதிகலங்க வைக்கும் ரஷ்யா, இந்தியாவின் கூட்டு இராணுவ பயிற்சி! இந்தியாவை தாக்குமா சவூதி..?

ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து நடத்தும் “Zapad-2025” இராணுவ பயிற்சியில் இந்தியா மற்றும் ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றுள்ளன.


இந்த பயிற்சி பெலாரஸின் போரிஸோவ் அருகே நடைபெறுகிறது.

NATO மற்றும் அமெரிக்காவுடனான ரஷ்யாவின் பதற்றமான சூழ்நிலையில் நடைபெறும் இந்த பயிற்சி, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஷ்ய செய்தி நிறுவனமொன்று தெரிவித்ததற்கேற்ப, இந்த பயிற்சியில் வங்காளதேசம், இந்தியா, ஈரான், பெலாரஸ், மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஃபாசோ, காங்கோ, மாலி ஆகிய நாடுகளின் படைப்பிரிவுகள் பங்கேற்றுள்ளன.


இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது, இந்தியா 65 வீரர்களை அனுப்பியிருக்கிறது. குறிப்பாக புகழ்பெற்ற குமாயோன் ரெஜிமண்ட் வீரர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.

இந்திய வீரர்கள் நிஜ்னி நோவ்கொரோட் நகரத்திற்கு மேற்கே 40 மெயில் தொலைவில் உள்ள முலினோ பயிற்சி மைதியத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடம் NATO எல்லைகளிலிருந்து தொலைவில் இருப்பதால், பாதுகாப்பு அபாயங்களை குறைக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


Zapad-2025 பயிற்சியின் நோக்கம் இந்தியா-ரஷ்யா இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கை மற்றும் நட்பை அதிகரிப்பதாகும்.

இந்திய வீரர்கள் ரஷ்ய படையினருடன் இணைந்து tactical பயிற்சிகள், சிறப்பு ஆயுத பயிற்சிகள் மற்றும் கூட்டு பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.



இதேநேரம் சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஒன்று தாக்கப்படும் பட்சத்தில், அது மற்ற நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

 இந்த ஒப்பந்தம் நேட்டோ  போன்ற பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு இணையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சம், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது என வரையறுப்பதாகும்.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த ஒப்பந்தத்தின்படி இனிமேல் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், சவுதி அரேபியா இந்தியாவை தாக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்தியாவுடன் நட்பு நாடாக இருக்கும் சவுதி அரேபியா இந்தியாவை தாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.