ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதி உக்ரைன் துருப்புக்களால் கொலை!

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ், உக்ரைன் துருப்புக்களால் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டள்ளது.உக்ரைனின் டோன்பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது தலைமையேற்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டதாக ‘ரோசியா 1’ என்ற ரஷ்ய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.‘டோனட்ஸ்க் மக்கள் குடியரசு’ என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்ட பகுதியில் இருந்து குடுசோவ் படைநடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இந்த செய்தி குறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் கூறவில்லை.எந்த சூழ்நிலையில் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டார் என்ற விபரங்களைத் தராமல், அவர் கொல்லப்பட்டதை உக்ரைன் இராணுவமும் உறுதி செய்துள்ளது.இதுவரை 12 ரஷ்ய ஜெனரல்களைக் கொன்றுள்ளதாக உக்ரைன் கூறுகிறது. குறைந்தபட்சம் 7 மூத்த ரஷ்ய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் கூறுகின்றன.