ரஸ்யாவின் கோர தாக்குதல் - உக்ரைனின் முக்கிய தளபதி மரணம்

உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது இளமை காலம் மொத்தமும் ரஷ்யாவுக்கும் அதன் பினாமிகளுக்கும் எதிராக சண்டையிட்டவர் இந்த டா வின்சி என புகழ்ந்துள்ளார் ஜெலென்ஸ்கி.

27 வயதான Dmytro Kotsiubailo இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முத்தில் கொல்லப்பட்டார்.

பக்முத் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது.

அந்த பக்முத் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்த ஆண்டில் உக்ரைனின் ஹீரோ என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, நமது வீரர்களை இழப்பது என்பது துயரமான ஒன்று. அவர்களின் தியாகத்தை நாம் எப்பொழுதும் மறக்கமாட்டோம். எப்போதும் நன்றியுள்ளவர்களாகவும் இருப்போம் என்றார்.