அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள் பாரிய சரிவைச் சந்தித்துள்ளன.
மேலும் ஆசியாவில் உள்ள பல பங்குச் சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் ஒரே பங்குச் சந்தையான கொழும்பு பங்குச் சந்தையும், ஜனாதிபதி டிரம்பின் முடிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வர்த்தக நாட்களுக்கு பாரிய சரிவை சந்தித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி வர்த்தக முடிவில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 16,007.44 சுட்டெண்களாக பதிவாகியிருந்தது.
இது நேற்றையதினம் 14,660.45 புள்ளிகளாக பாரிய சரிவைப் பதிவு செய்தது. இந்த 3 வர்த்தக நாட்களில் மட்டும், கொழும்பு பங்குச் சந்தை 1,346.99 புள்ளிகள் அல்லது 8.41 சதவீதம் சரிந்துள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 2 ஆம் திகதி நிலவரத்திற்கமைய, 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகிய கொழும்பு பங்குச் சந்தை, நேற்று வரையில் 5,253.18 பில்லியனாக குறைந்துள்ளது.
இந்த 3 நாட்களில் மாத்திரம் 435.37 பில்லியன் ரூபா அல்லது 43,537 கோடி ரூபாய் கொழும்பு பங்குச் சந்தைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் பங்குச் சந்தைக்கு 227 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவொரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்படைந்துள்ளதாக, பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேநேரம் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
அமெரிக்காவுடன் இலங்கையின் வர்த்தக உறவை சமநிலைப்படுத்துவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது.
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு ஈடான அணுகுமுறை வழங்கும் முக்கியத்துவத்தை நான் இதன்போது வலியுறுத்தினேன்.
நியாயமான, சமநிலைபடுத்தப்பட்ட வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. மேலும் இரு நாடுகளிலும் தொழில்துறைகளை வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.