இந்திய திரைஉலகத்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இரண்டு பிரம்மாண்டப்படங்கள் அடுத்தடுத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருத்தது. ஒன்று ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் , மற்றயது பிரபாஸ் நடிக்கும் ராதேஷ்யாம். ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7 ஆம் திகதியும், ராதேஷ்யாம் படம் 14 ஆம் திகதியும் வெளியாகும் என அறிவித்து இருந்தார்கள். இப்போது கொரோனா மூன்றாவது அலை ஒமிக்ரான் வடிவில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. அதனால் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் படங்களின் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது ஒமிக்ரான் பரவல் அதிகமாகி வருவதால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு தயங்குகின்றார்கள். எனவே இந்த இரண்டு படங்களையும் தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            