சூப்பர் ஸ்டாருடன் மோதும் ராக்கி!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ராக்கி பட நடிகர் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் பட பாணியில் ஜெயிலர் படப்பிடிப்பு துவங்கும் முன்பே டீசர் வெளியிட நெல்சன் முடிவெடுத்துள்ளாராம். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்துடன் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவராஜ்குமார் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம். ஆனால் இந்த தகவல்கள் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை.

இந்த நிலையில் தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த வசந்த் ரவி இந்தப் படத்தில் நடிக்கிறாராம். ராக்கி படத்தில் வசந்த் ரவியின் நடிப்பு விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.