கோடையில் உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரும் அபாயம்-மளிகை விநியோக நிறுவனம்!

இந்த கோடையில் உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரும் என மளிகை விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.பாண், இறைச்சி, பால் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முக்கிய பொருட்கள் 15 சதவீதம் என்ற வீதத்தில் உயரும் என மளிகை விநியோக நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் உணவைத் தவிர்ப்பார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.‘பாங்க் ஒஃப் இங்கிலாந்து’ மதிப்பீட்டை விட நீண்ட காலத்திற்கு விலைகள் வேகமாக உயரும் என்றும் கணித்துள்ளது.மளிகை விநியோக நிறுவனம், முக்கிய மளிகை கடைக்காரர்களுக்கு பகுப்பாய்வை வழங்குகிறது. பிரித்தானியா 1970ஆம் ஆண்டுகளுக்கு பிறகு முக்கியமாக உக்ரைன் போரின் போது மிக உயர்ந்த வாழ்க்கை அழுத்தத்தை எதிர்கொள்கிறது.உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டும் முக்கிய உலகளாவிய தானிய உற்பத்தியாளர்கள். உலக கோதுமை விநியோகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்த நாடுகள் வழங்குகின்றன.எனவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலகெங்கிலும் உள்ள நாடுகள் விளைபொருட்களுக்காக போராடும் போது தானியங்களின் விலையை உயர்த்துகிறது.