டீசல் இல்லாததால் திரும்பி வந்த நோயாளர்கள்


புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட இரு நோயாளர்கள் டீசல் பிரச்சினைகளால் மீண்டும் புத்தளம் வைத்தியசாலைக்குகே கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். 

புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு தில்அடியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே எரிபொருள்கள் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், நோயாளர்களை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸ் வண்டிக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் வைத்தியசாலையின் அதிகாரிகள் பாரதூரமானப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.