தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை ஓய்வு!

முதன் முதலாக உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை ஓய்ந்துள்ளது.இந்தநிலையில் அங்கு இரண்டு ஆண்டுகளாக அமுலில் இருந்த பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.தேசிய கொரோனா வைரஸ் கட்டளை சபை மற்றும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு சபையின் கூட்டங்களைத் தொடர்ந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.பிறப்பித்த உத்தரவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாடும் நேரத்துக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது என கூறப்பட்டுள்ளது. பொது நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.உள்ளரங்குகளில் 1,000 பேரும் திறந்தவெளிகளில் இரண்டாயிரம் பேரும் கூடலாம். இரவு 11 மணிக்கு மேலும் மது பானங்கள் பரிமாறலாம். அடுத்த 15 நாட்களில் பாடசாலைகள் திறக்க உள்ளது.