அரசாங்கத்தின் மௌனமான நிலை! அநுர தரப்பிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் ஆனல் அரசு மௌனமாக இருக்கின்றது என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த, யுனானி, என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது.

இந்த கற்கை நெறியை நிதைவுசெய்து தமிழ் சிங்களம் முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இறுதிப் பயிற்சி நிலை

இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர். இதேநேரம் மருத்துவப் பயிற்சி நெறியை முடித்தும் தம்மை பயன்படுத்தாத நிலையில் அல்லது போக்கில் இலங்கையின் சுதேச மருத்துவம் இருப்பது கவலையானது.

மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் ஆனல் அரசு மௌனமாக இருக்கின்றது.

அதைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமநத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர்.

ஆனால் எம்மை கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும்” என்றார்.