தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரன்வீர் சிங்-காவல்துறையினர் வழக்குப்பதிவு!

தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ரன்வீர் சிங் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாணமாக இருக்கும் படங்களைப் பதிவிட்டிருந்தார். அவரது செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயலுக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் அர்ஜூன் கபூர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ரன்வீர் சிங்கைப் பின்பற்றி நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாணமாக இருக்கும் படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் ரன்வீர் சிங்கின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனராம்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாண படங்களை பகிர்ந்ததால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.முன்னதாக லைகர் பட போஸ்டரில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நிர்வாணமாக இருந்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது.