ஒல்லியாக மாறிய ரம்யா

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்பிரமணியன். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஓகே கண்மணி , கேம் ஓவர், ஆடை , மாஸ்டர் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கொரோனா காலத்தில் ரசிகர்களோடு வீடியோவிலும் நேரலையிலும் பேசியும், அவர்களுக்கு உடற் பயிற்சி  குறித்து அறிவுரைகளையும் இவர் தனது சமுகவலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார். இந்த கடினமான உடற் பயிற்சிகள் மூலம் ஒல்லியாக மாறி இருக்கிறார். ரம்யா தற்போது ஒரு புகைபடத்தை சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்துள்ளார். இதில் முதல் இருந்ததை விட மிகவும் ஒல்லியாக தெரிகின்றார். மேலும் அனைவரும் உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும் என அவர் போட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர்.