தமிழில் வெளியாகும் ரஜிதாவின் மலையாளப்படம்

அணுராக கரிக்கின் வெல்லம் என்ற மலையாளப்படத்தின்  மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜிதா விஜயன். தமிழில் கர்ணன், ஜெய் பீம் படங்களில் நடித்துள்ளார். தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகின்றார். ரஜிதா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ஜுன். இதில் ஜோஜு அசோகன் , சன்னிவேயோன், அஜுவர்க்கீஸ் ஆகியோர்  நடித்துயிருந்தார்கள். இப்படத்தை அகமத் கபிர் இயக்கியிருந்தார். இது பள்ளி மாணவிகளின்   உளவியல் ரீதியான பிரச்சனைகளை பற்றி கூறும் படமாகும். இந்த படம் தற்போது தமிழில்  மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றது. ஆன்ட் அண்ட் எலிபன்ட்ஸ் சினிமாஸ் சார்பில் அனில் கே.ரெட்டி மற்றும் வி. ஜெய்பிரகாஸ் ஆகியோர் வெளியிடுகின்றார்கள்.