கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட ரயில் ஊழியர்கள் தீர்மானம்!


கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஊதிய பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சுமார் பாதி தொழிலாளர்களை உள்ளடக்கிய நெட்வொர்க் ரெயிலின் ஊழியர்கள், கிறிஸ்மஸ் ஈவ் அன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 27 வரை வெளிநடப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய சலுகை வழங்கப்பட்ட போதும், அதனை சங்கம் உறுப்பினர்கள் நிராகரித்தனர்.

திட்டமிடப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கை, அடுத்த வாரம் தொடங்கி ஜனவரி வரை தொடரும் அல்லது மேலும் தொடரும் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

டிசம்பர் 24 – 27ஆம் திகதிகளில் வேலைநிறுத்தங்கள், நான்கு 48 மணி நேர காலப்பகுதிகளில் 14 ரயில் நிறுவனங்களின் தொழிற்துறை நடவடிக்கையும் நடைபெறும். 13-14 டிசம்பர், 16-17 டிசம்பர், 3-4 ஜனவரி, 6-7 ஜனவரி திகதி வேலைநிறுத்தங்கள் இடம்பெறும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) ரயில் விநியோகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றாலும் அடுத்த வாரம் வேலைநிறுத்தங்கள் தொடரும்.

கிறிஸ்மஸுக்கு முன்னதாகவே தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு பயணிகள் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டனர்.

சுமார் 5 சதவீதம் ரயில் நெட்வொர்க் பொறியியல் பணிகளுக்காக மூடப்பட்டது. இருப்பினும் பல ரயில்கள் கிறிஸ்மஸ் மற்றும் பொக்ஸிங் டே தினத்தில் இயங்கவில்லை.