பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள ரயில் பாதை தாக்குதல் : பின்னணியில் ரஸ்யாவா?

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில், பிரான்ஸ் ரயில் பாதைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அட்லாண்டிக், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பாதைகளில் அதிவிரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அதேவேளை, உக்ரேன் - ரஷியா இடையேயான போர் நடந்து வரும் நிலையில் இந்த ரயில் பாதைகள் மீதான தாக்குதலில் ரஷியா பின்னணியில் இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேவேளை, சுற்றுசூழல் ஆர்வலர்கள் இந்த ஒருங்கிணைந்த தாக்குதலை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரான்சில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவானவர்கள் இந்த ரயில் பாதை தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
 
இதையடுத்து, இந்த தாக்குதல் பின்னணியில் யார் உள்ளார்? என்பதை கண்டறிய பிரான்ஸ் அதிகாரிகள் களமிறங்கி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.