புத்தளம் சாஹிரா சீர்திருத்த பள்ளி அல்ல; ஆசிரியருக்கு எதிராக கவனயோர்ப்பு ஆர்ப்பாட்டம்



 
மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திய அதிகாரிகளை தண்டிப்பதற்காக வழங்கப்படும் “Punishement Transfer” என்கின்ற தண்டனை இடமாற்றத்தை சுமந்த அதிகாரிகள் தொடராக பல தடவை புத்தளம் பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

தவறிழைத்த அரச அதிகாரிகளை புத்தளம் அனுப்பும் செயற்பாட்டிற்கு எதிராக நேற்று புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கவனயோர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று புத்தளம் மாவட்ட தலைமைகளால் நடாத்தப்பட்டது.