தோல்வியை ஏற்றுக்கொண்டு உக்ரைனிடம் சரணடைகிறாரா புடின் - வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு!


உக்ரைன் ரஷ்யா இடையே பல மாதங்களாக தொடர்ந்த வரும் போரில் தற்போது சற்று திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உக்ரைன் அதிபருடன், புடின் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனத் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை உக்ரைன் ஏற்றுக்கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் இன்று விடுத்த அறிக்கையொன்றில், “நன்கு அறியப்பட்ட, மீண்டும் மீண்டும் குரல் எழுப்பப்பட்ட புதிய ஆட்சியெல்லை யதார்த்தங்களை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவுள்ளதை புடின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உக்ரைனில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை ரஷ்யா பிரகடனப்படுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் துருக்கிய அதிபர் தையூப் அர்துவான் இன்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.