ஈரானுக்குச் சென்ற புடின் புடினே அல்ல - பரபரப்பை ஏற்படுத்திய உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர்!

ஈரானுக்குச் சென்ற புடின் புடினே அல்ல என்று உக்ரைனில் புதிதாக பதவியேற்றிருக்கும் உளவுத்துறைத் தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த வாரம் உக்ரைனில் புதிதாக உளவுத்துறைத் தலைவராக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் (Kyrylo Budanov) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புடினுடைய உயரம் மற்றும் காதுகளின் தோற்றத்தில் வித்தியாசம் தெரிவதாகவும் கைரேகையிலும் வித்தியாசம் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புடினுடைய புகைப்படங்களை கவனித்துப்பார்த்தால் சில படங்களில் அவரது காது சிறியதாகவும், வேறு சில படங்களில் அவரது காது பெரியதாகவும் இருப்பதைக் காணலாம் என்கிறார்.

அத்துடன், புடின் சமீபத்தில் ஈரானுக்குச் சென்றபோது, விமானத்திலிருந்து வெளியே வரும் புடினைக் கொஞ்சம் கவனியுங்கள், நடக்கவே தடுமாறும் புடின் வேகமாக மிடுக்காக துள்ளிக் குதித்து வருவதை அந்தக் காட்சியில் காணலாம்.

இதேவேளை, உண்மையான புடின் மோசமான வகையில் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், பொது நிகழ்ச்சிகளில் புடினுக்கு பதிலாக அவரைப்போல என்னொரு போலி பங்கேற்பதாகவும் தான் நம்புவதாக உளவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, 2018 ஆம் ஆண்டு, புடினைப் போலவே தோற்றம் கொண்ட போலி புடின்கள் மூன்று பேர் வரை இருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.