ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி!

ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது.மேலும் டொனெட்ஸ்கில் சமீபத்திய வெற்றிகளைப் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இழந்த எந்தவொரு பிரதேசத்தையும் ரஷ்யா மீட்டெடுக்கும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.ஊடகவியலாளர்களிடம் இருந்து சமீபத்திய இழப்புகள் பற்றிய கேள்விகளை எதிர்கொண்ட புடின் இழப்புகள் மீட்கப்படும் எனவும் உக்ரைனிய துருப்புகள் திரும்ப அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

உக்ரைனியப் படைகள் தெற்கிலும் கிழக்கிலும் வெற்றி பெற்று வருகின்றன. லுஹான்ஸ்கின் உக்ரைனிய ஆளுனர் செர்ஹி ஹைடாய், இப்பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள மேலும் மூன்று கிராமங்களை உக்ரைன் விடுவித்துள்ளதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி பின்னர் கூறினார்.டேவிடிவ் பிரிட் என்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கிராமம் உட்பட, முந்தைய நாள் கெர்சனில் தொடர்ச்சியான மீட்புக்குப் பிறகு இது வருகிறது.