உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் சிங்கப்பூர்


உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை 'ஹென்லி கடவுச்சீட்டு இண்டெக்ஸ்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பட்டியலின் 2-வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டு மூலம் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்