தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியீடு!

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணதாச கொடிதுவாக்கு ஆகியோர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இந்த பட்டியல் வெளியாகியுள்ளது,

அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி தகவல் அறியும் உரிமையின் கீழ் இவ்விரு உறுப்பினர்களும் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் உரிய தகவல்களைக் கோரியுள்ளனர்.1977 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் தற்போது ஓய்வு பெறும் உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது