ஐ.நாவின் பொறிக்குள் மீண்டும் சிக்கும் சிறிலங்கா - ஆரம்பமானது விசாரணை!

தொழில் நிமித்தம் சுற்றுலா விசாவில் ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை ஐ.நா ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, மேற்குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 இந்த விவகாரம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் எனத் தெரிவித்து, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெப்ரவரி 7ஆம் திகதி கடிதமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிறிலங்கா அரசாங்கம் இது குறித்து பதிலளிக்கவில்லை. இந்நிலையிலேயே தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.