அரிசியின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் போராட்டம்!

அரசாங்கம் உடனடியாக அரிசியின்  விலையை   100 ரூபாய்க்கு  கீழ் கொண்டு வருமாறு கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதனடிப்பiயில் ”அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை குறைக்கவேண்டும்” என வலியுறுத்தி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக  இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.


வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ‘அரிசியின் விலையேற்றத்தால் பசியில் வாடுகிறோம்,  வளச் சுரண்டல்களை நிறுத்து, பொருளாதார சுமையைக் குறை, ஏழையின் வயிற்றில் அடிக்காதே, பட்டினிச் சாவு வேண்டாம், பிள்ளைகளை பசியால் வாட்டாதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.

இதேநேரம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைதத்தனர்