இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து முல்லையில் போராட்டம்

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த இன்று(24) முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண கடைப்பிறப்பில் தொடர்ச்சியாக இந்திய கடற்தொழிலாளர்களுடைய அத்துமீறிய நடவடிக்கைகள் காணப்படுவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் கடற்தொழிலாளர்கள் கவலை வெளியிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு சென்று கடற்தொழிலாளர் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக கதைப்பதில்லை எனவும் இங்கு குற்றம் சாட்டப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுடன் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவின்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம், அதிபருக்கான(ரணில்) மற்றும் கடல் தொழில் அமைச்சர் ஆகியோருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது.

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தாம் அறிந்துள்ளதாகவும் இருந்த தொடர்பாக உரிய தரப்புகளுக்கு தெரியப்படுத்துவதாகவும் இந்த மகஜர்களை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் சுமார் 70 வரையிலான கடற்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.