செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவிடத்திற்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்,
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத் ஆகியோரும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.