சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் பிரியங்கா மோகன்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்ரார் ரஜினி காந்த் நடிக்கும் 169 ஆவது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.