கொரோனா பரவலுக்கு மத்தியில் திட்டமிட்டபடி தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்!

தென்கொரியாவில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருகின்றது.எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. இந்த வாக்கு பதிவு இன்றும் நடக்கிறது.முன்கூட்டியே வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் 3,500க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.தென் கொரியாவின் ஜனாதிபதி பதவிக்காக, ஆளும் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகள் என லீ ஜே-மியுங், ஆன் சியோல்-சூ, சிம் சாங்-ஜங் மற்றும் யூன் சுக்-யோல் ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர்.லீ ஜே-மியுங். முன்னாள் ஜியோங்கி மாகாண ஆளுநர், ஜனாதிபதி மூன் ஜே-இன்னுக்குப் பிறகு ஆளும் ஜனநாயகக் கட்சியால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.யூன் சுக்-யோல். முன்னாள் தலைமை வழக்கறிஞரும் எதிர்க்கட்சியான மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளருமான யூன் அரசியலுக்குப் புதியவர். 2017ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன்-ஹே மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எதிர்க் கட்சி மறுபெயரிடப்பட வேண்டியதன் அவசியத்தால் அவரது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.முன்னதாக, கொரோனா பரவலுக்கு மத்தியில், தென்கொரியா 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தமை குறிப்பிடத்தக்கது.