பெரமுனவின் நிபந்தனைக்கு அடிபணிந்தார் ரணில்



அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சுதந்திரம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக் கூடாது என அந்த கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் கடந்த திங்கட்கிழமை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

எனினும், குறித்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற ரீதியில் நடைபெற்றதாக கட்சியின் சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக விடயங்களில் ரணில் விக்ரமசிங்க தலையிடக் கூடாது என அந்தக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து, குறித்த கோரிக்கைக்கு அதிபர் இணக்கம் தெரிவித்ததாக கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அதிபருக்கும் தனது முழு ஆதரவையும் வழங்குவதாக பொதுஜன பெரமுன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.