திடீரென தரையிறக்கப்பட்ட ரணில் சென்ற உலங்குவானூர்தி: வெளியான காரணம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த உலங்குவானூர்தி வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் தரையிறங்கியது.

 அத்தோடு, அதிபர் வெலிமடைக்கு சென்று கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வேறு ஒரு வாகனம் வரும் வரையும் பாடசாலையில் காத்திருந்து வாகனம் வந்த பிறகு அதில் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.