செவ்வந்தியை தொடர்ந்து பிரசன்ன ரணவீரவும் நாட்டை விட்டு தப்பியோட்டம் - வலுக்கும் சந்தேகம்



கணேமுல்ல சஞ்சீவ கொலை சந்தேக நபர்இசாரா செவ்வந்தி மற்றும் நில விற்பனைதொடர்பான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகியோர்நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனரா என
சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கடை நீதிமன்றத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவைச்சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இசாரா செவ்வந்தி
நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகபாதுகாப்புப் படையினர் மத்தியில் சந்தேகம்
எழுந்துள்ளது.

முன்னதாக, கொலைக்கு துப்பாக்கியைக்கொண்டு வந்த இசாரா செவ்வந்தி, சாட்சியங்களை மறைப்பதற்காக கணேமுல்லசஞ்சீவவின் கொலையில் தொடர்புடைய சில தரப்பினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை பலர் வெளிப்படுத்தியிருந்தனர்.

இருப்பினும், அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்காததால்,சந்தேக நபரான இசாரா செவ்வந்தி நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக பலர் தற்போது சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதிபுதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்லசஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைநடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இன்னும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதேவேளை களனிப் பகுதியில் நிலவிற்பனை தொடர்பான குற்றச்சாட்டில்முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவைகைது செய்ய பொலிஸார் சமீபத்தில் அவரதுவீட்டிற்குச் சென்ற போதிலும், அவர் அங்குஇல்லை. இதனால் அவரும் நாட்டை விட்டுதப்பிச் சென்றுவிட்டதாக பொறுப்பான அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும், பல இடங்களில் தேடுதல்வேட்டை நடத்தப்பட்டாலும், இன்றுவரைஅவரைக் கண்டுபிடிக்க பொலிஸாரால்முடியவில்லை. அதன்படி, கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பிரசன்ன ரணவீரவும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக பல தரப்பினர் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.