நிலவில் லேண்டரை படம்பிடித்து அனுப்பிய பிரக்யான்! அரிய படத்தை வெளியிட்ட இஸ்ரோ

ஆய்வு செய்து கொண்டே விக்ரம் லேண்டரை படம்பிடித்து பிரக்யான் ரோவர் அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

கடந்த 23-ம் திகதி சந்திரயான்- 3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது. அதற்கான காணொளியும் இஸ்ரோ வெளியிட்டது.

அதன்படி, நிலவின் மண்ணில் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் இருந்து லேண்டர் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட chaSTE, ILSA ஆகிய கருவிகளின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

அதாவது, பிரக்யான் ரோவர் ஆய்வு செய்து கொண்டே, விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இந்த புகைப்படமானது ரோவரில் (NavCam) உள்ள நேவிகேஷன் கேமராவால் எடுக்கப்பட்டது. இதில், chaSTE என்பது நிலப்பரப்பின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி ஆகும்.

ILSA என்பது கனிமங்களின் தன்மை மற்றும் அங்கு ஏற்படும் அதிர்வுகளை கண்டறியும் கருவி ஆகும்.