இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியிலும், பிலிப்பைன்ஸின் பிரதான தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் லூசன் தீவில் இருந்து 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் தாக்கியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை என்றும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் இரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த நிலநடுக்கத்தினால், கட்டடங்கள் குலுங்கியது மற்றும் பீதியடைந்த மக்கள், குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேற்றினர்.இந்தோனேசியாவில் அதிகாலை 4:06 மணிக்கு 21 கிலோமீட்டர் (13 மைல்) ஆழத்தில் தாக்கியது. அதன் மையப்பகுதி சுமத்ராவின் பரிமன் நகருக்கு மேற்கே 167 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலமான பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கூறியது.பிலிப்பைன்ஸில், காலை 5:05 மணிக்கு கடலோர நிலநடுக்கம் ஏற்பட்டதாக, பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இருப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்களை அனுபவிக்கின்றன.