ஜப்பானில் 6.3. ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சேதங்கள் தொடர்பில் வெளியான தகவல்


புதிய இணைப்பு

ஜப்பானின் (Japan) மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு (17) 11.14 மணியளவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் 8 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உவாஜிமா (Uwajima) நகரில் 12 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டது.

அத்துடன் எஹிம் பகுதியில் ஒசூ நகரில் ஏற்பட்ட நிலச்சரிவினால், வீதியில் பாறைகள் உருண்டோடியதுடன் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள இகாடா எரிசக்தி உலை வழக்கம் போல் செயற்படுவதாக அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

ஜப்பானில் (Japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake ) ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது இன்று (17.4.2024) ஜப்பானின் மேற்கு மாகாணமான உவாஜிமா என்ற பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 6.3 என பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனடாவில் தொழில் புரிவோருக்கு ஏற்படவுள்ள சிக்கல் - வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் தொழில் புரிவோருக்கு ஏற்படவுள்ள சிக்கல் - வெளியான அதிர்ச்சி தகவல் 

யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிடிருப்பதாவத


இந்த நிலநடுக்கம் அங்குள்ள ஷிகாகு, கியாஷூ ஆகிய இரு தீவுகளில் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தாக அந்நாட்டுள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பாதிப்பு குறித்தும் சுனாமி எச்சரிக்கை குறித்தும் தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.