2022 ஆம் ஆண்டின் துவக்கமே கொரோனாவின் 3 ஆவது அலையுடன் ஆரம்பமாகியுள்ளது. தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என பல மாநிலங்கள் அறிவித்து விட்டன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் பெரியப்படமாக இந்த வாரம் ஜனவரி 7 ஆம் திகதி வெளி வர இருந்த ஆர்ஆர்ஆர் படத்தை தள்ளி வைத்து விட்டனர். பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ராதேஸ்யாம் படம் ஜனவரி 14 அன்று வெளியாகும் என்று நேற்று வரை தகவல் வெளிவந்தன. கர்நாடகாவில் தற்போது வார இறுதி நாட்களில் ஊரடங்கு விதித்து விட்டனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டபடங்கள் படங்கள் திட்டமிட்டபடி வெளிவர வாய்ப்புஇல்லை என்பதுதான் தற்போதைய நி லைமை. ராதேஸ்யாம், வலிமை, வீரமே வாகை சூடு ஆகியப்படங்கள் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை தள்ளி வைக்க அதிக வாய்ப்புக்கள் மிக விரைவில் இதற்கான அறிவிப்புக்கள் வெளியகலாம்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            