பிரபல போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகப்புள்ளியுமான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தகவுக்கு கைத்தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டா தற்போதைக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கண்காணிப்பில் தங்காலை பழைய சிறைச்சாலையில் தீவிர கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து கைத்தொலைபேசியொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.
கைது
அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஹரக் கட்டாவின் சிறைக்கூடம் அருகே காவல் பணியில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப்படை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே குறித்த கைத் தொலைபேசியை வழங்கியுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.