தென்னாபிரிக்காவில் பாரிய உயிரிழப்பை ஏற்படுத்திய நைட்ரேட் ஒக்சைட் வாயு கசிவு

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஒக்சைட்டு வாயு கசிந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆபிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது.

இங்கு சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கான தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.

இந்த வாயுவை சுவாதித்த 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த விடயத்தை தெரிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வாயு கசிவால் மயக்கமடைந்த சுமார் 10 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகளின் கருத்துக்களின் படி, உரிமம் பெறாத சுரங்கத் தொழிலாளர்கள், தங்கத்தை சுத்திகரிக்க பயன்படுத்தியபோது அபாயகரமான நைட்ரேட் வாயு கசிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவர்களின் வருகைக்குப் பிறகு, வாயு கசிவால் மயக்கமடைந்த சிலரை காப்பாற்ற முடிந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ளவர்களில், நான்கு பேர் மோசமான நிலையில் உள்ளதாகவும், 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

ஒருவர் ஓரளவுக்கு நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 பெண்களும், மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவர் எனக் கூறப்பட்டுள்ளது.