அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 60 உடல்கள் மீட்பு

இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 64 பேருடன் வொஷிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன் தினம் இரவு பயணித்துள்ளது.

விமானம் வொஷிங்டனில் உள்ள ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க நெருங்கிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான  ஹெலிகொப்டர் ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் இருந்து பயணித்துள்ளது.
இந்நிலையில், தரையிறங்க முன்ற பயணிகள் விமானமும், பயணத்தை ஆரம்பித்த ராணுவ ஹெலிகொப்டரும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

 இந்த கோர விபத்தில் பயணிகள் விமானத்தில் பயணித்த 64 பேர், ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேர் என மொத்தம் 67 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  
இதேநேரம் விமானத்தின் கருப்புப்பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கருப்புப்பெட்டியை முழுமையாக ஆய்வு செய்தபின்னரே இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது