கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்! பிரபல இசைக்கலைஞர் உட்பட 12 பேர் பரிதாப பலி!


மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுரஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் பிரபல இசைக்கலைஞர் உட்பட 12 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹொண்டுரஸ் நாட்டில் உள்ள ரோவாடான் என்ற தீவிலிருந்து லான்சா ஏர்லைன்ஸ{க்கு சொந்தமான சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று 17 பயணிகளுடன் திங்கட்கிழமை இரவு புறப்பட்டு லா சீபா நகரம் நோக்கி பயணித்துள்ளது.

 
கடலுக்கு மேலே செல்லும்போது நிலை தவறிய விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக விமானம் விழுந்த இடத்திற்கு சென்று ஒருசிலரை மீட்டுள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

 விபத்தில் பிரபல இசைக்கலைஞரான ஆரேலியா மார்டினெஸ் சுவாஜோவும் பலியாகியுள்ளார். விமானம் முழு உயரத்தை எட்ட முடியாமல் விபத்தில் சிக்கி கடலுக்கு மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.