அமெரிக்காவில் ஆற்றில் வீழ்ந்த விமானம்: மூவர் பலி

அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் (Nebraska) சிறிய ரக விமானம் ஒன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, இந்த விபத்தில்  மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விசாரணை

இந்தநிலையில், இறந்தவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பாக பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்க உள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.