பிரான்ஸ்(france) தலைநகர் பாரிஸிலுள்ள(paris) ஈபிள் கோபுரத்தை(Eiffel Tower)இரவு நேரங்களில் புகைப்படம் எடுப்பது சட்டத்தை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக ஈபிள் கோபுரம் விளங்குகின்றது.
ஈபிள் கோபுரத்தின் ஒளி அமைப்பை 1985ஆம் ஆண்டு Pierre Bideau என்பவர் வடிவமைத்துள்ள நிலையில் அந்த ஒளி அமைப்பு ஒரு கலைப்படைப்பாக கருதப்படுகிறது.
ஐரோப்பிய பதிப்புரிமைச் சட்டப்படி 70 ஆண்டுகளுக்கு இரவு நேரத்தில் ஈபிள் கோபுரத்தை யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது.
இந்நிலையில் ஒளி அமைப்பு 70 ஆண்டுகளுக்கு அவரது பதிப்புரிமையின் கீழானது என்பதால் இரவு நேரத்தில் ஈபிள் கோபுரத்தை புகைப்படம் எடுப்பதைக் குறித்து இன்னும் பல ஆண்டுகளுக்கு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
இதனையடுத்து சட்டத்தை மீறுவோர், அபராதம் செலுத்த நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            