மட்டக்களப்பில் அந்தோனியார் சொரூபத்திலிருந்து கண்ணீர் வழிவதாக மக்கள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடிவதாக மக்கள் பார்வையிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் குறித்த சம்பவத்தினை காண்பதற்காக பெருமளவானோர் குவிந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட கூழாவடி சந்தியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்தில் நேற்று மாலையிலிருந்து கண்ணிலிருந்து நீர் போன்ற திரவம் வடிந்து வருகின்றது.

இது தொடர்பான செய்தி பரவியதை தொடர்ந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் திருச்சொருபம் உள்ள இடத்திற்கு படையெடுப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.