மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த திரளும் மக்கள் கூட்டம்!

மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த, மக்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர்.படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டு மற்றும் கச்சேரி அரங்கான நிப்பான் புடோகானில் நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக உலகெங்கிலும் உள்ள சுமார் 4,300 சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர்.அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு அருகில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் அல்லது அதற்கும் மேலாக அருகிலுள்ள அதிகாரிகளால் மேசையில் பூக்கள் அகற்றப்பட்டு வருகின்றன.முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ஆம் திகதி, ஜப்பானின் மேற்கில் உள்ள நாரா நகரில் பிரச்சாரக் கூட்டத்தில் தனது கட்சிக்காக ஸ்டம்ப் உரையை நிகழ்த்தியபோது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.