கடவுச்சீட்டு விவகாரம்: அரசாங்கத்தின் கோரிக்கையை தூக்கியெறிந்த மக்கள்

அவசர தேவைகள் உள்ளவர்களை மாத்திரம் கடவுச்சீட்டுக்களை பெற வருகை தருமாறு அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பத்தரமுல்லையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் இன்றும் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகங்களுக்கு நேற்றையதினம் (30) கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய கடவுச்சீட்டுக்கள் தொகுதிகளாக பெறப்பட்டு வருவதாகவும் நவம்பர் நடுப்பகுதியில் 100,000 கடவுச்சீட்டுகள் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, அவசர தேவை உள்ளவர்கள் மட்டும் கடவுச்சீட்டுக்களை பெற வருமாறும் கேட்டுக்கொண்டார்.

எனினும், அத்தியாவசிய தேவைகள் இருப்பதால் மட்டுமே கடவுச்சீட்டுக்களை பெற வருகை தந்திருப்பதாக மக்கள அமைச்சரின் கருத்தை விமர்சித்துள்ளனர்.

இதேவேளை, அதிகாரிகள் முறையான வகையில் சேவைகளை வழங்க தவறியதால் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை உருவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.