176 பயணிகளுடன் தீப்பிடித்த பயணிகள் விமானம்

தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று 176 பயணிகளுடன் தீப்பிடித்துள்ளது.

எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 தென் கொரியாவின் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஹொங்கொங்கிற்கு, 169 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் 176 பேரை ஏற்றிக்கொண்டு குறித்த விமானமானது புறப்பட தயார் நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், புறப்படுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்பு, விமானம் தீப்பிடித்துள்ளது.

இதையடுத்து விமானத்திலிருந்த 176 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் மூன்று பேருக்கும் மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.