மீண்டும் அதிகரித்தது பால்மாவின் விலை!

400 கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரித்துள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.அதன்படி 400 கிராம் பால் மாவின் புதிய விலை 790 ரூபாயாக அதிகரித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு குறித்து இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அண்மைக்காலமாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இரண்டு தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பக்கெட் 540 ரூபாய்க்கும் ஒரு கிலோ பால் மா பக்கெட் 1,345 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை தற்போது சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பால் மாவை கொள்வனவு செய்வதற்காக இன்று பல பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.