தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தான் காவல்துறைத் தலைமையகம்!


கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பாக்கிஸ்தானின் கராச்சியில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றிரவு நடத்தப்பட்ட குறித்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தீவிரவாத தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளதுடன், அதில் மூன்று காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களில் ஒருவரும், 3 தீவிரவாதிகளும் உள்ளடங்குகின்றனர்.

காவல்துறை தலைமையகம் தற்போது பாதுகாப்பாக உள்ளதாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் தலிபான் அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பல மாதங்களாக நீடித்த சமரச ஒப்பந்தமானது கடந்த நவம்பரில் முடிவுக்கு வந்ததுள்ளதுடன், தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அங்கு வலுவடைந்து வருகின்றது.