பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்புகள்: பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குறித்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளளன.

அதன்போது, நாட்டின் பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரின் கட்சி அலுவலகம் அருகே முதல் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பின்னர் கில்லா சைஃப் உல்லா மாவட்டத்தில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்தது, இதில் 8 பேர் உயரிழந்துள்ளனர்.

அதேவேளை, வெடிப்புச் சம்பவங்களால் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையி்ல், வெடிப்புச் சம்பவங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில் இந்த வெடிப்புகள் தொடர்பாக உலகின் கவனம் பாகிஸ்தானின் மீது குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.