பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி  கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப் மாகாண பொலிஸ் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் கடந்த 9 ஆம் திகதி இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுளில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.